பெங்களூரு, கர்நாடகாவில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி, குழந்தையை இளைஞர் சுத்தியலால் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் அண்ட்ரலு கிராமத்தை சேர்ந்த இளைஞர் கன்னுரு சாமி. இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி (வயது 25) என்ற மனைவியும் 7 மாதங்களே ஆன பெண் குழந்தையும் இருந்தது. இதனிடையே, மனைவி ராஜேஸ்வரியின் நடத்தையில் கன்னுரு சாமி சந்தேகப்பட்டுள்ளார். இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. சுத்தியலால் அடித்துக்கொலை இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கன்னுரு சாமி நேற்று இரவு மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கன்னுரு சாமி வீட்டில் இருந்த சுத்தியலால் மனைவி ராஜேஸ்வரி மற்றும் குழந்தையை அடித்துக்கொலை செய்துள்ளார். பின்னர், அவர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கன்னுரு சாமியின் வீட்டிற்கு சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/man-kills-wife-7-month-old-daughter-with-hammer-in-karnataka-surrenders-before-police




