வாஷிங்டன் அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஷாலினி (வயது 38). இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சகிரிமெண்டொ நகரில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தார். இதனிடையே, ஷாலினிக்கு 22 வயதான இளைஞர் தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அந்த இளைஞர் ரோகித் என்பதும் அவர் அரிசோனா மாகாணத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றதும் தெரியவந்துள்ளது. துப்பாக்கி சூடு; இளம்பெண் பலி அதேவேளை, இளைஞர் ரோகித்தின் நடவடிக்கைகளால் அதிர்ச்சியடைந்த ஷாலினி அவரிடமிருந்து விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரோகித் கடந்த வியாழக்கிழமை மாலை ஷாலினி வேலை செய்யும் உணவகத்திற்கு வந்துள்ளார். உணவகத்திற்கு வெளியே ஷாலினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரோகித் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென ஷாலினியை சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் ஷாலினி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இளைஞர் தற்கொலை இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய ரோகித் அங்கிருந்து காரில் தப்பிச்சென்றார். இந்த துப்பாக்கி சூடு குறித்து அறிந்த போலீசார், காரை துரத்தி சென்றனர். அப்போது வெட் அவென்யூ பகுதியில் கார் நின்றுகொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர், அந்த காரின் அருகே சென்று பார்த்தபோது காருக்குள் இளைஞர் ரோகித் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து, ரோகித்தின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த துப்பாக்கி சூடு, தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/shock-in-us-indian-woman-shot-dead




