ஒவ்வோர் ஆலயத்துக்கும் ஒரு சிறப்பு உண்டு. சில கடன் பரிகாரத்தலமாகத் திகழும். சில செல்வ வளம் அருளும். ஒருசில நோய் தீர்க்கும் தலமாகத் திகழும். சில தலங்கள் திருமண வரம் தரும் தலங்களாக அறியப்படும். அப்படித் திருமண பரிகாரத்தலமாக விளங்கும் தலம்தான் குத்தாலம் ஸ்ரீஉக்தவேதீஸ்வரர் ஆலயம். இங்கு ஈசன் பரதமுனிவரின் மகளாகப் பிறந்த பார்வதி தேவியைத் திருமணம் செய்துகொண்டார் என்கிறது தலபுராணம். பொதுவாக தெய்வத் திருமணங்கள் அனைத்துமே பக்தர்களுக்கு அருள் செய்வதற்காக நிகழ்ந்த திருவிளையாடல்கள்தான். அவ்வாறு இத்தலத்தில் நிகழ்ந்த திருக்கல்யாணமும் உலகம் உய்ய நிகழ்ந்த அருளாடலே. எனவே இந்தத் தலம் வந்து ஈசனையும் அம்பிகையையும் வழிபட்டால் விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஸ்ரீஉக்தவேதீஸ்வரர் ஒருவருக்கு, ஜாதகத்தில் எந்தக் கிரகத்தால் தோஷம் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்து, அந்தக் கிரகத் துக்கு உரிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம் நிவாரணம் பெறலாம். அவ்வகையில், ஜாதகத்தில் சூரியனால் கல்யாண தோஷம் ஏற்பட்டிருந்தால், ஞாயிற்றுக்கிழமையில் அமிர்தயோகமோ, சித்தயோகமோ உள்ள காலை வேளையில் சூரியனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது அவசியமாகும். செவ்வாயால் திருமணம் தோஷம் ஏற்பட்டிருந்தால், செவ்வாய்க் கிழமையில் முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. குறிப்பாக, வைத்தீஸ்வரன்கோவில் சென்று அங்காரகப் பிரீதி செய்துகொள்வது நல்லது. உலக சுகபோகங்களுக்கு அதிபதி சுக்ரன். அவரின் நிலையின் காரணமாக ஜாதகத்தில் கல்யாண தோஷ பாதிப்புகள் இருக்குமாயின், வெள்ளிக்கிழமையில் இந்திரனையும், சசிதேவியையும் வழிபடுவது நல்லது. அன்றைய நாளில் சுமங்கலி பூஜை செய்வதும் மிக விசேஷம். நவகிரகங்களில் புதனின் நிலையானது ஜாதகத்தில் கல்யாணத் தடைகளுக்குக் காரணமாக இருந்தால், மகாவிஷ்ணு வழிபட்டுப் பலன் பெறலாம். புதன்கிழமைதோறும் மகா விஷ்ணுவை வழிபடுவதுடன், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மை தரும். ஏகாதசி விரதம் இருப்பது மிகவும் சிரேஷ்டமான பரிகாரம் ஆகும். கல்யாணத் தடைக்கு சர்ப்ப கிரகங் களும் காரணம் ஆகலாம். அப்படியான ஜாதகர்கள், ராகு ப்ரீதிக்கு காலன், சர்ப்பேஸ்வரன் ஆகியோரை வழிபடுவதும் உளுந்து தானம் செய்வதும் நல்லது. தோஷம் எதுவாக இருந்தாலும் அதைத் தீர்க்கும் ஹோம வழிபாடு ஒன்று உண்டு. அதுதான் சுயம்வர பார்வதி ஹோமம். அன்னை பார்வதி ஈசனை அடைய மேற்கொண்ட வழிபாடு இது என்பார்கள். இதற்கான மந்திரங்களை பிரம்ம தேவரே உருவாக்கிக்கொடுத்தார் என்பது ஐதிகம். அதன்படி இந்த சுயம்வர பார்வதி ஹோமத்தில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்தாலே கிரகதோஷங்கள் தீரும் என்பது நம்பிக்கை. ஶ்ரீசுயம்வர ஹோமத்தில் கலந்துகொள்ள முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும் இப்படிப்பட்ட அற்புதமான இந்த ஹோம வழிபாடு அருள்மிகு உக்த வேதீஸ்வரர் திருக்கோயிலில் 13.9.26 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் வாசகர்கள் கலந்துகொண்டு சங்கல்பம் செய்து வழிபடலாம். இதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டது. ஆனால் முன்பதிவு அவசியம். மேலும் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பில் பதிவு செய்துகொண்டால்போதுமானது (இதுகுறித்து வேறு எந்தத் தகவலும் அனுப்பப்படமாட்டாது. பதிவு ஒன்றே போதுமானது.) நீங்கள் நேரடியாக கோயிலில் வந்தும் சங்கல்பம் செய்துகொள்ளலாம். இந்த நிகழ்வை லலிதா ஜுவல்லர்ஸ், ரூபிஅபெக்ஸ் மற்றும் தமிழ் மேட்ரிமோனி இணைந்து வழங்குகிறார்கள். ஹோமத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஒருமணி நேரம் முன்னதாகவே வந்துவிடுவது நல்லது. ஶ்ரீசுயம்வர ஹோமத்தில் கலந்துகொள்ள முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/spiritual/gods/swayamvara-parvathi-homam-at-kuttalam




