சென்னை, புதிய இணைப்பு அமெரிக்க-ஈரான் போர் காரணமாக இந்தியாவுக்கு பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டது. இதனால் பெட் ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. கியாஸ் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு புதிய சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்குவதை தடை செய்தது. இதுபோல் ஏற்கனவே கியாஸ் இணைப்பு பெற்றவர்களுக்கும் முன்பதிவு செய்து சிலிண்டர் பெற வழக்கத்தை விட நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியது இருந்தது. அதற்கு பிறகு ஓரளவு நிலைமை சீராகி, தற்போது கியாஸ் சிலிண்டர்கள் உடனுக்குடன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இளம் தம்பதிகள் அதே நேரத்தில் இன்னும் புதிய இணைப்புகள் வழங்குவதற்கான தடை நீக்கப்படாமல் உள்ளது. இதனால் திருமணம் ஆகி தனிக்குடித்தனம் செல்லும் இளம் தம்பதிகள் தவித்து வருகிறார்கள். இதன் காரணமாக சமையல் செய்வதற்காக மானிய விலை கியாஸ் சிலிண்டர் கிடைக்காமல், வணிக சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு வாங்குவதால் குறைந்த வருமானம் கொண்ட தம்பதிகள் அவதி அடைந்து வருகிறார் கள். இதுமட்டுமின்றி, கியாஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாததால் புதிய ரேஷன் கார்டு பெறவும் அவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இணைப்பு ரசீது கட்டாயம் இதுகுறித்து புதிய கியாஸ் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள ஒருவர் கூறியதாவது:- நான் திருமணத்துக்கு பின்னர் பெற்றோருடன் வசித்து வந்தேன். தற்போது பணி காரணமாக தனிக்குடித்தனம் வந்துள் ளேன். தற்போது எனது வீட்டுக்கு புதிய கியாஸ் இணைப் புக்கு விண்ணப்பிக்க சென்றபோது தற்காலிகமாக புதிய இணைப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக கியாஸ் ஏஜென் சிகளில் தெரிவித்தனர். இதனால் வீட்டில் சமையல் பணி கடும் சிரமமாக உள்ளது. இந்தநிலையில் புதிய ரேஷன் கார் டுக்கு விண்ணப்பித்தபோது, அதற்கு கியாஸ் இணைப்பு ரசீது கட்டாயம் என்று கூறுகிறார்கள். இப்போது கியாஸ் இணைப் பும் இல்லாமல் புதிய ரேஷன் கார்டுக்கும் விண்ணப்பிக்க முடியாமல் சிரமப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார். வழங்க முடியாது இதுகுறித்து ஈரோட்டில் உள்ள கியாஸ் ஏஜென்சீஸ் மேலாளர் ஒருவரிடம் கேட்டபோது, 'சுமார் 6 மாதங்களுக்கு மேலாக புதிய கியாஸ் இணைப்பு வழங்கப்படவில்லை. புதிய இணைப்பு வழங்குவது தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை வழங்க முடியாது' என்றார். இதுபோல் ரேஷன் கார்டு விண்ணப்பத்தில், மனு தாரர்கள் தனி வீட்டில் வசிக்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சியாக கியாஸ் இணைப்பு ரசீது கண்டிப்பாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யவில்லை என்றால் விண்ணப்பம் தானாக நிராகரிக்கப்பட்டு விடும் என்று வட்ட வழங்கல் துறையினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக அரசும், அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுத்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என் பதே இளம் தம்பதிகளின் வேண்டுகோளாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/young-couple-in-distress-due-to-inability-to-get-a-new-gas-connection



