கொல்கத்தா, மேற்கு வங்காளம் மாநிலம் தெற்கு 24 பார்கானாக்கள் மாநிலத்தில் பாருய்பூர் பகுதியை சேர்ந்தவர் 11 வயது சிறுமி. தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக கடந்த 4-ந்தேதி மாலை 6 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டநிலையில் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. சிறுமி பாலியல் பலாத்காரம் சிறுமியின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காதநிலையில் போலீசில் புகார் அளித்தனர். மறுநாள் காலை அங்குள்ள குளத்தில் சிறுமின் உடல், சாக்கில் மூட்டையாக கட்டப்பட்டு வீசப்பட்டு கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரிந்தது. அப்பாவி இளைஞர் கொலை இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அந்த வன்முறையின் போது, சந்தேகத்தின் பேரில் இந்திரஜித் மொண்டல் என்ற அப்பாவி இளைஞரை கும்பல் அடித்துக் கொன்றது. சம்பவ இடத்துக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி விரைந்து வந்து இதுகுறித்து உரிய விசாரணை நடத்து மாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். என்கவுன்ட்டர் இதுதொடர்பாக பிரபாஸ் மொண்டல் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 20 நாட்கள் சிறையில் அடைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. நேற்று நள்ளிரவு 1 மணியளவில் குற்ற சம்பவம் நடந்த இடத்துக்கு பிரபாஸ் மொண்டலை விசாரிக்க போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் திடீரென போலீசாரின் துப்பாக்கியைப் பறித்துச் சுட்டுவிட்டுத் தப்பியோட முயன்றார். அப்போது போலீசார் தற்காப்புக்காக அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிரபாஸ் மொண்டல் உயிரிழந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/kolkata-rape-murder-accused-killed-in-police-encounter




