கயானா, நியூசிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி கயானா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 49.5 ஓவர்களில் 267 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. டேரில் மிட்சேல் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். அல்சாரி ஜோசப் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார், இதையடுத்து 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி,, 48.5 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்தது. இதன் மூலம் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காட்டி 95 ரன்களும், ஷாய் ஹோப் 87 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/odi-match-against-new-zealand-west-indies-wins




