கீவ், ரஷியாவுக்கு எதிரான போருக்கு நிதி திரட்ட ஆபாச படங்களை சட்டப்பூர்வமாக்க உக்ரைன் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் - ரஷியா போர் உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க சிறப்பு தூதர்கள் ஸ்டீவ் விக்ட்ஆப் மற்றும் ஜெரட் குஷ்னர் ரஷியா, உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆபாச படங்களை சட்டப்பூர்வமாக்க உக்ரைன் பரிசீலனை? இந்நிலையில், ரஷியாவுக்கு எதிரான போருக்கு நிதி திரட்டுவதற்காக ஆபாச படங்களை சட்டப்பூர்வமாக்கி வரி விதிக்கும் மசோதாவை உக்ரைன் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒழுங்குமுறை வருவாயை உயர்த்தும் எனவும் ஊழலை குறைக்கும் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக உக்ரைன் எம்.பி. ஜெலெஸ்னியா நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்துள்ளார். இந்த நடவடிக்கை மூலம் 30 ஆயிரம் டிரோன்கள் வாங்குவதற்கு தேவையான நிதி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஆபாச படங்கள தயாரிப்பது, வைத்திருப்பது அல்லது வினியோகிப்பது சட்ட விரோதம் என்ற நிலை உள்ளது. இதற்கு 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும். ஆனால் தற்போது காவல் துறையில் நிலவும் ஊழல் காரணமாக உக்ரைனில் ஆபாச படத்தொழில் விரிவடைந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே ஊழலை தடுக்கவும், போருக்கு நிதி திரட்டவும் இந்த முடிவை உக்ரைன் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/ukraine-considers-legalizing-porn-to-fund-war-against-russia



