புதுடெல்லி, உலக டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் இரட்டையர் தரவரி சையில் இந்தியாவின் மானவ் தாக்கர்-மனுஷ் ஷா ஜோடி (3,390 புள்ளி) ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதேபோல் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தியா சிதாலே-யாஷஸ்வினி இணை ஒரு இடம் ஏற்றம் கண்டு 10-வது இடத்தை தனதாக்கி இருக்கிறது. கலப்பு இரட்டையர் பிரி வில் இந்தியாவின் தியா சிதாலே-மனுஷ் ஷா கூட்டணி ஒரு இடம் உயர்ந்து 5-வது இடத்தை சொந்தமாக்கி இருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/othersports/world-table-tennis-rankings-manav-manush-pair-moves-up-to-2nd-place




