சென்னை, லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘டிசி’ படத்தின் 2வது பாடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநராக பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிசி’ திரைப்படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் 'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மேலும், லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU) மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். சமீபத்தில் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'கூலி' திரைப்படமும் வெளியாகி ரசிகர்களிடையே பேசுபொருளானது. கேங்ஸ்டராக லோகேஷ். முக்கிய வேடங்களில் வாமிகா கபி, சஞ்சனா சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘டிசி’ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் 'தேவதாஸ்' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி 'சந்திரா' கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், சஞ்சனா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வன்முறை காட்சிகளால் கவனம் ஈர்த்த ‘டிசி’ டிரெய்லர் சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதில் வாமிகா கபி மற்றும் சஞ்சனா பாலியல் தொழிலாளிகளாகவும், லோகேஷ் கனகராஜ் கேங்ஸ்டராகவும் நடித்திருப்பது தெரியவந்தது. பழிவாங்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டன. “ஏ” சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) ‘டிசி’ திரைப்படத்திற்கு 'ஏ' (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், வன்முறை நிறைந்த ஆக்சன் திரைப்படமாக ‘டிசி’ ரசிகர்களை திரையரங்குகளில் சந்திக்க தயாராகியுள்ளது. ‘டிசி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் முன்னதாக வரும் ஜூலை 31ம் தேதி படம் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ‘டிசி’ படம் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் ‘டிசி’ படத்தின் ‘பூம் பா டிகா டிகா’ பாடல் வெளியாகியுள்ளது. அனிருத், வேடன் இணைந்து பாடிய இப்பாடலை ஹெய்ஸன்பர்க் மற்றும் வேடன் எழுதியுள்ளனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘டிசி’ படத்திலிருந்து வெளியான ‘ராகா ஆப் ரிவெஞ்’ மற்றும் ‘ஹேங்க் ஓவா’ பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. Tham tharikida thithithom, Yudham murugana sabhdham thom! Volume up and feel the rush. is out now! ▶️ … — Sun Pictures (@sunpictures) July 18, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/lokesh-kanagarajs-dc-film-2nd-song-out




