சென்னை, திபெத் எல்லை நேபாளத்தில் இன்று ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெள்ள பாதிப்பு தொடர்பான சேதங்களை மதிப்பிடும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை வெளியான தகவலின்படி, வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களில் 57 பேர் தமிழர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நேபாளத்தில் சிக்கிய தமிழகர்களை மீட்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தமிழக அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். நேபாளத்தின் ரசுவா பகுதியில் சிக்கிய 36 பெண்கள் உள்பட மொத்தம் 57 தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது குறித்து நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு தமிழக அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/floods-in-nepal-minister-vinoth-states-that-consultations-with-the-central-government-regarding-the-rescue-of-tamils-are-ongoing



