மாட்ரிட், 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட் லைப் ஸ்டேடியத்தில் கடந்த நடந்த இறுதி ஆட்டத்தில் ரோட்ரி தலைமையிலான ஸ்பெயின் அணி கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பிய னாக களம் கண்ட மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. ஆட்டம் முடிந்ததும் ஸ்பெயின் அணி வீரர்கள் மைதானத்தை வலம் வந்து தங்களது வெற்றியை ஆரவாரமாக கொண்டாடினர். மைதானத்துக்குள் ஓடிவந்த ஸ்பெயின் அணி வீரர்களை சில அர்ஜென்டினா வீரர்கள் தாக்கியது வீடியோ காட்சிகள் முலம் வெட்டவெளிச்சமானது. அர்ஜென்டினா வீரர் மோலினா, ஸ்பெயின் கேப்டன் ரோட்ரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், அதனை தடுக்க வந்த சக வீரர்களான எரிக் கார்சியா, காவியை அர்ஜென்டினா அணியின் லியாண்ட்ரோ பாரேட்ஸ், தியாகோ அல்மாடா ஆகியோர் கழுத்தை பிடித்து கீழே தள்ளிவிடுதும், சமூக வலை தளங்களில் வைரலானது. இது கால்பந்து ஆர்வலர்களை முகம் சுளிக்க வைத்தது. சர்வதேச வீரர்களின் தரம் தாழ்ந்த செயலால் கடும் அதிருப்திக்குள்ளாகி இருக்கும் சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) மைதானத்தில் வீரர்கள் இடையே நடந்த அநாகரீகமான மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், அர்ஜென்டினா அணியினர் தொடர்பாக ஸ்பெயின் வீரர் காவி கூறியதாவது, அர்ஜென்டினா வீரர்கள் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. குழந்தைகளுக்கு இது நல்ல முன்மாதிரியாக இருக்காது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் கால்பந்து விளையாட்டில் எப்போதும் ஆக்ரோஷமான ஒரு பக்கமும் இருந்து கொண்டே இருக்கிறது. நடந்த அனைத்தும் கால்பந்தின் ஒரு பகுதிதான் என்று நான் கருதுகிறேன்.என தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/football/aggression-is-also-part-of-football-spanish-player




