சென்னை, புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்து சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து முறையாக உள்ளது. குறிப்பாக, சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அலுவலகம் செல்வோர், மாணவ - மாணவியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ரெயில் சேவை பாதிப்பு இந்நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரெயில் சேவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார வயர் அறுந்து விழுந்ததால் சென்னை கடற்கரையில் ஏராளமான புறநகர் ரெயில்கள் தண்டவாளத்தில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் பயணிகள் மிகுந்த அவதியடைந்துள்ளனர். பயணிகள் அனைவரும் சென்னை பூங்கா ரெயில் நிலையத்திற்கு தண்டவாளத்தில் நடந்து சென்று அங்கிருந்து ரெயில் ஏறி பயணம் செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் உள்பட அனைத்து தரப்பினரும் மின்சார ரெயில் சேவை பாதிப்பால் மிகுந்த அவதியடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-beach-tambaram-local-trains-service-delayed




