நடிகைகளை பற்றி அவதூறாக பேசி ஆனந்தம் கொள்பவர்கள் திருந்த வேண்டும் என்று ஆலியா பட் தெரிவித்துள்ளார். பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட், முன்னணி நடிகரான ரன்பீர் கபூரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். திருமணத்துக்கு பிறகும் ஆலியா பட் படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆலியா பட் பேசிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளன. அபத்தமான விஷயம் "கையில் செல்போன் இருந்தால், பிரம்மாக்கள் என்று சிலர் நினைத்து விடுகிறார்கள். திரை பிரபலங்களை குறிப்பாக, நடிகைகளை பற்றி அவதூறாக பேசி ஆனந்தம் கொள்கிறார்கள். இதெல்லாம் எவ்வளவு அபத்தமான விஷயம் என்று தெரியவில்லையா? திருந்த வேண்டும் ரசிகர்களை மகிழ்விக்க நடிகைகள் பல கஷ்டங்களை தாங்கிக்கொள்கிறார்கள். அந்த நடிகைகளை கொண்டாட மனம் வரவில்லை என்றாலும், தவறாக பேசாமல் இருக்கலாம் அல்லவா? இனியாவது அப்படிப்பட்ட நபர்கள் திருந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று ஆலியா பட் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/people-who-speak-ill-of-actresses-should-change-alia-bhatt




