கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற ஓணம் பண்டிகை வருகிற 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜாதி மதங்கள் கடந்து, அனைத்து தமிழர்களும் ஒட்டுமொத்தமாக கொண்டாடப்படுவது போல் கேரள மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக கொண்டாடப்படும் பண்டிகையாக ஓணம் பண்டிகை திகழ்கிறது. கேரள மாநிலத்தவர் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில், குடும்பத்தினர், உற்றார் உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து ஓணம்பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இதற்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள், சொந்த ஊர்களுக்கு, ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு, சில தினங்களுக்கு முன்னதாகவே சென்று விடுவது வழக்கம்.அதன்படி ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள கேரள மாநிலத்தவர்கள், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளனர். இதற்காக சிறப்பு ரெயில்கள், பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதைப்போல் ரெயில், பஸ்களில் செல்லும்போது, பல மணி நேரம் பயண நேரம் ஆகும் என்பதால் பலர் விமானங்களில், கேரள மாநிலம் செல்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-keralites-shocked-as-airfares-triple




