லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் கொவன் கிராமத்தில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். 2 பேர் பலி அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பட்டாசு தயாரிக்கும் அறை இடிந்து தரைமட்டமானது. இந்த வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். மேலும், 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கி மாயமானவர்களை தேடி வருகின்றனர். இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/2-killed-as-explosion-rips-through-firecracker-factory-in-up




