ஏஐ (செயற்கை நுண்ணறிவு) நிறுவனங்கள் உருவாக்கி வரும் 'சூப்பர்இன்டெலிஜென்ஸால்' 2030-க்குள் மனிதகுலமே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆந்த்ரோபிக் நிறுவனத்திலிருந்து விலகிய வல்லுநர் ஜேக்கப் காக்ஸன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 27 வயதான ஜேக்கப் காக்ஸன், கடந்த 3 ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதற்கு முன்பு ஓபன் ஏஐ நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். தற்போது அந்த பணியில் இருந்து விலகியிருக்கும் ஜேக்கப் காக்ஸ்டன் பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்படவில்லை. தங்களைத் தாங்களே மேம்படுத்திக்கொள்ளும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதில் நிறுவனங்கள் அவசரமாக போட்டியிட்டு வருகின்றன. இதுபோன்ற தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் உயிருடன் சூதாடுவதற்கு சமம். 2030க்குள் மனிதர்களை இவை அழிக்கலாம். செயற்கை நுண்ணறிவை உருவாக்கி வருபவர்களே, அது இந்த தசாப்தத்தின் முடிவுக்குள் மனிதர்கள் அனைவரையும் அழித்துவிடக்கூடும் என்று உண்மையாக நம்புகின்றனர். எதிர்காலத்தில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் கணினி அமைப்புகளை ஊடுருவுதல், பல்வேறு துறைகளில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துதல் மற்றும் நிஜ உலகில் அதிகாரத்தையும் வளங்களையும் தங்களிடம் திரட்டிக்கொள்ளும் அளவுக்கு சக்திவாய்ந்ததாக மாறக்கூடும்” என்றார். காக்ஸனின் கருத்துக்கு அதே நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு பிரிவு தலைமை ஆய்வாளரான இவான் ஹூபிங்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.செயற்கை நுண்ணறிவு மனித இனத்தையே அழிக்கும் சாத்தியம் இருப்பதாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்த ஆபத்து 10 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என்று ஹூபிங்க கூறியுள்ளார். மேலும், அதிநவீன செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பாக மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுவதை உறுதி செய்வதற்கான முழுமையான தீர்வு தங்களிடம் இன்னும் இல்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/ai-could-kill-us-all-by-decade-end-anthropic-researcher-quits-drops-a-bombshell




