சென்னை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறு வேலை வழங்குவது கருணை அடிப்படையிலானது என்றாலும், இது சட்டத்திற்கு புறம்பானது மற்றும் தவறான முன்னுதாரணமாகும். எனவே, இது குறித்து இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல தரப்பினராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாமல் அரசு வேலை வழங்கியது. நீதிமன்றம் தற்போது அதற்கு தடைவிதித்துள்ளது. மேல் முறையீடு எனவே, நீதிமன்ற தீர்ப்பை ஏற்று அரசு பணி வழங்கியதை தமிழ்நாடு அரசு திரும்பப் பெறவேண்டும் என்றும் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது. அதே வேளையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தேவையான வேலைவாய்ப்பு,மற்றும் பொருளாதார உதவிகளை தவெக தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று செய்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தவெக தலைமையை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-should-withdraw-the-government-job-it-granted-in-compliance-with-the-court-verdict-m-veerapandian-insists




