சென்னை, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளராக அசாம் மாநிலத்தை சேர்ந்த சுபதீப் கோஷை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நியமித்துள்ளது. இலங்கை தொடரில் புதிய பொறுப்பு வருகிற 15-ம் தேதி தொடங்கவுள்ள இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூலம், சுபதீப் கோஷ் இந்திய அணியுடன் தனது புதிய பயணத்தை தொடங்க உள்ளார். தலைமைப் பயிற்சியாளர் அசாம் மாநிலத்தின் திக்பாய் பகுதியைச் சேர்ந்த சுபதீப் கோஷ், அசாம் மற்றும் ரெயில்வே அணிகளுக்காக விளையாடியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக மாறிய சுபதீப் கோஷ், அசாம் மாநில மூத்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு பல இளம் வீரர்களை உருவாக்கியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/subhadeep-ghosh-appointed-as-the-indian-teams-new-fielding-coach




