சென்னை, என் சார்பாக என் குடும்பத்தினர் கூட குடமுழுக்கில் கலந்து கொள்ளவில்லை என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். கோவில் குட முழுக்கு சென்னையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- இதுவரை மதுரை கோவிலில் தரிசனம் செய்யவில்லை. நான் குடமுழுக்கு விழாவில் தலையிடவில்லை. என் சார்பாக என் குடும்பத்தினர் கூட குடமுழுக்கில் கலந்து கொள்ளவில்லை. பொதுமக்களுக்கு ஆன்லைன் மூலமாக பாஸ் விநியோகம் செய்யப்பட்டது. பாஸ் என்ன நிறம் என்பதே முந்தைய நாள் தான் எனக்கு தெரியவந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நல்லப்படியாக முடிந்தது. இதனை தாங்கி கொள்ள முடியாமல் திமுகவினர் அவதூறு பரப்புகின்றனர். பி.எஸ் என்.எல் பணியால் மின் தட்டுப்பாடு பல மாநிலங்களில் மின் வெட்டு இருக்கிறது; பஞ்சாபில் 14 மணி நேர மின் வெட்டு இருக்கிறது. கேரளா, பஞ்சாப் மாநிலத்தில் மின்சாரம் வாங்க முடியவில்லை என்று மின்வெட்டு அறிவிப்பு வெளியிட்டு பவர் கட் செய்து விட்டார்கள். தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குகிறோம். பஞ்சாப் மாநிலம் உள்ளிட்டவற்றுடன் ஒப்பிடும் போது நமது மாநிலத்தில் மின்சார பிரச்னையை சமாளித்து இருக்கிறோம்.பி.எஸ் என்.எல் லைன் பணியின் போது மின்சார லைன்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஒருசில இடங்களில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமில்லை. அனைத்து மாநிலங்களிலும் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. தினகரனை ஒதுக்கி வைத்தவர் ஜெயலலிதா மிசாவில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்று டிடிவி தினகரன் கூறுவதற்கு கூச்சமாக இல்லையா? ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்கி பேசி கொண்டிருக்கிறார். 10 ஆண்டு காலமாக தினகரனை ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார். எடப்பாடி பழனிசாமியை துரோகி என கூறியவர். அவர் நேற்று பேசுவது ஒன்றாக இருக்கும்; இன்று பேசுவது ஒன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-a-power-shortage-in-all-states-minister-nirmal-kumar




