சென்னை, நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா' திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. திகில் மற்றும் நகைச்சுவை கலந்த இந்த திரைப்படம் குடும்ப ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து வெளியான 'காஞ்சனா 2' மற்றும் 'காஞ்சனா 3' திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், ரசிகர்களின் வரவேற்பிலும் சாதனை படைத்தன. இறுதிப் பாகமாக உருவாகும் 'காஞ்சனா 4' இந்த வெற்றித் தொடரின் அடுத்த பாகமாக 'காஞ்சனா 4' திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தையும் ராகவா லாரன்ஸே எழுதி இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். அவருடன் பூஜா ஹெக்டே மற்றும் இந்தி திரையுலக நடிகை நோரா பதேஹி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், 'காஞ்சனா' திரைப்பட வரிசையில் வெளியாகும் கடைசி பாகம் இதுவாக இருக்கும் என திரையுலக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா இந்த நிலையில், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை டி.ஆர். கார்டனில் நடைபெற்று வருகிறது. இந்தக் கட்ட படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் இடம்பெறும் முக்கியமான ஃபிளாஷ்பேக் காட்சிகளில் நயன்தாரா நடிப்பதாகவும், அவரது கதாபாத்திரமே படத்தின் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், 'காஞ்சனா 4' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/nayantharas-entry-in-kanchana-4-a-major-plot-twist




