சென்னை, சமூக நீதிக்கு துல்லியமான தரவுகள் அவசியம் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- 9 ஆகஸ்ட் 2026 அன்று, 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பிற்கான முறையியல் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். சாதிப் பதிவுகள் SECC 2011-ல் பின்பற்றப்பட்ட “திறந்த வகை” (Open Column) அணுகுமுறையின் காரணமாக, 1931ஆம் ஆண்டு பதிவான 4,147 சாதிப் பதிவுகளுடன் ஒப்பிடுகையில், 46 லட்சம் சாதிப் பதிவுகள் உருவாகின. இவ்வளவு துண்டு துண்டான தரவுகள் உருவானதால், அவற்றை பயன்படுத்த முடியாதவை என அரசே குறிப்பிட்டது. இதை நாம் மீண்டும் செய்யக்கூடாது. 2027ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்:- * முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, குறியீடுகளுடன் கூடிய சாதிப் பட்டியல்கள் * எழுத்துப்பிழை மற்றும் உச்சரிப்பு வேறுபாடுகளால் ஏற்படும் பிழைகளைத் தவிர்க்க ஒவ்வொரு சாதிக்கும் தனித்துவமான குறியீடுகள் * அரிதாகப் பதிவாகும் சாதிப் பெயர்களுக்கு டிஜிட்டல் சரிபார்ப்பு ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். தெலங்கானாவின் SEEEPC மாதிரியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சமூக நீதிக்கு அறிவியல் ரீதியாகத் துல்லியமான, நம்பகமான தரவுகள் அவசியம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆகஸ்ட் 2026 அன்று, 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பிற்கான முறையியல் குறித்து பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். SECC 2011-ல் பின்பற்றப்பட்ட “திறந்த வகை” (Open Column) அணுகுமுறையின் காரணமாக, 1931ஆம் ஆண்டு பதிவான… — Manickam Tagore.Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) August 13, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/precise-data-is-essential-for-social-justice-manickam-tagore-urges-the-prime-minister




