மதுரை, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குறும்பட இயக்குனர் முகமது செரிப் என்பவர் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- மதுரையில் செல்போன் கடை நடத்துகிறேன். கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா நேரத்தில் 'டாட் நங்கை' என்ற பெயரில் திருநங்கைகள் குறித்த 3 நிமிட குறும்படம் ஒன்றை தயாரித்தேன். இதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டபோது, அதிகமானோர் கவனத்தை ஈர்த்தது. திருநங்கைகள் மத்தியிலும் வரவேற்று பேசப்பட்டது. இக்கதையை திரைப்படமாக தயாரிக்க முயற்சித்த நிலையில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் சமீபத்தில் வெளியான திருநங்கை பற்றிய 'டோரதி' என்ற திரைப்படத்தை பார்த்த சிலர் எனக்கு பேசினர். எனது குறும்பட கதை போன்று இருப்பதாக தெரிவித்தனர். நானும் அப்படத்தை பார்த்தபோது. எனது குறும்பட கதைக்கருவை என்னுடைய அனுமதியின்றி திருடி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 'டோரதி' திரைப்படத்தை இயக்கி வெளியிட்டு இருப்பது தெரிந்தது. இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது சட் டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/complaint-lodged-with-the-police-commissioner-against-director-karthik-subbaraj



