வாஷிங்டன், சர்வதேச கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையில் பதிக்கப்பட்டிருந்த அனைத்து கண்ணிவெடிகளும் அமெரிக்க கடற்படையால் வெற்றிகரமாக அகற்றப்பட்டு, வெடிக்க வைக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை புதிய கண்ணிவெடிகளை பதிக்கும் எந்தவொரு ஈரானிய கப்பலோ அல்லது படகோ கணப்பொழுதில், திட்டமிட்டு துவம்சம் செய்யப்படும்" என டிரம்ப் தனது 'ட்ரூத் சோசியல்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கண்ணிவெடிகள் வைக்கும் விவகாரத்தில் அமெரிக்கா "பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" கொள்கையை முழு வீச்சில் கையில் எடுத்துள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். விண்வெளிப் படை மூலம் கண்காணிப்பு ஹார்முஸ் நீரிணையின் ஒவ்வொரு அங்குலமும் அமெரிக்காவின் விண்வெளிப் படை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ஈரானின் எந்தவொரு அத்துமீறலும் உடனடியாக முறியடிக்கப்படும் என்றும் வாஷிங்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/iran-ships-will-be-destroyed-immediately-if-mines-are-laid-trump-warning




