திருச்சி மாவட்டம், கிராப்பட்டி மெயின் ரோட்டில் ஒரு ஸ்வீட் கடை அருகில் நடந்து செல்போன் பேசிக்கொண்டே ஒரு இளைஞர் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், அந்த இளைஞர் திடீரென்று செல்போனைக் கீழே போட்டுவிட்டு, அவ்வழியாக வந்த டிப்பர் லாரி முன் பாய்ந்தார். இதில், அவர் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். trichy இதுகுறித்து, திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், எதற்காக டிப்பர் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்தார் என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் திருச்சி கிராப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர்: ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை - பட்டப்பகலில் நடந்த கொடூரம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/trichy-youth-commits-suicide-by-jumping-in-front-of-a-tipper-lorry




