ஆமதாபாத், குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. மதுபானம் தயாரித் தல், விற்பனை செய்தல், குடித்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு இதற்கிடையே, குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டம் காராகடி கிராமத் தில் நடந்த விருந்து நிகழ்ச்சியில், கள்ளச்சாராயம் அருந்திய 5 நண்பர் கள், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டனர். இதுபற்றி மாவட்ட அதிகாரிக ளுக்கு தகவல் கிடைத்தது. 5 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். நச்சுத்தன்மைவாய்ந்த, ரசாயனம் கலந்த மது அருந்தியதால் தற்செயலாக ஏற்பட்ட மரணம் என்று போலீசார் வழக் குப்பதிவு செய்தனர். பின்னர், பக்கத்து கிராமங்களிலும் கள்ளச்சாராயம் குடித்த பலர் அடுத்த டுத்து நோய்வாய்ப்பட்டனர். அதனால் சாவு எண்ணிக்கை நேற்று 7 ஆக உயர்ந்தது. மேலும் 30 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் பிரபல மது நிறுவனத்தின் போலி பாட்டில்களில் நிரப்பப்பட்டு விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்கட்ட விசாரணையில், மத்தியப்பிரதேசத்தில் இருந்து அந்த பாட்டில்கள் வந்திருப்பது தெரிய வந்தது. குறிப்பாக எங்கிருந்து வந்தது? எங்கு தயாரிக்கப்பட்டது, பாவ்நகருக்கு யார் அனுப்பியது என்று போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். 21 மது வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/death-toll-from-illicit-liquor-in-gujarat-rises-to-7




