சட்டப்பேரவை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கா.கருணாநிதி வெற்றி பெற்றார். இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த 18-ம் தேதி இரவு கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் பி.கீதாஜீவன், தலைமைக் கழகப் பேச்சாளர் சூர்யா வெற்றி கொண்டான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், பேசுகையில் தமிழ்நாடு முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதைத் தொடர்ந்து நேற்று இரவு அவர் மீது புகார் அளிக்க தவெகவினர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு திரண்டனர். ஆனால் புகார் எதுவும் வழங்காமல் திரும்ப சென்று விட்டனர். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் வழங்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/order-issued-to-remand-dmk-mla-markandeyan-to-judicial-custody




