நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரை 47 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு கடந்த 20.11.2012 அன்று போக்குவரத்து தொடங்கியது. வல்லநாடு தாமிரபரணி ஆற்றங்கரையின் குறுக்கே 400 மீட்டர் தொலைவில் பாலமும் அமைக்கப்பட்டது. இந்த சாலையில் தினமும் ஆயிரக் கணக்கான கனரக வாகனங்கள் தூத்துக்குடி துறைமுகம், பல்வேறு தொழிற்சாலைகளுக்குச் சென்று வருகிறது. வெளி மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்களும் இந்த சாலை வழியேதான் சென்று வருகின்றன. சீரமைப்பு பணிகள் இந்த பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது முதல் தொடர்ந்து பழுதாகி வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. அதன் பின்னரும் தொடர்ந்து பாலத்தில் பழுது ஏற்பட்டு வந்தது. சீரமைப்பு பணிகள் மேற்கொண்டும் மீண்டும் பழுதானது. இதுகுறித்து தூத்துக்குடி எம்.பி., கனிமொழி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து கடந்த 25.09.2022-ல் ரூ.13.22 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. பாலத்தின் இரு புறங்களையும் பலப்படுத்தும் பணிகள் நடந்து வந்தன. இந்தப் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்த நிலையில், 6 மாதத்திற்குள் மீண்டும் பழுதானது. பாலத்தின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிலையில் 21வது முறையாக மீண்டும் சேதமானதால் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளது. இதனால், போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாற்றி விடப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. சீரமைப்பு பணிகள் இது குறித்து சமூக ஆர்வலர்களிடம் பேசினோம், “பாலம் கட்டப்பட்ட காலத்தில் இருந்து இரு பாலங்களிலும் முறையாக ஒரே நேரத்தில் போக்குவரத்து நடைபெறவில்லை. ஒரு பாலத்தில் பழுது ஏற்பட்டால் அதை சீரமைப்பதும், மற்றொரு பாலத்தில் மட்டும் போக்குவரத்தை அனுமதிப்பதுமாக இருந்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் இந்த பாலத்தில் நடந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/hole-appears-for-the-21st-time-on-the-river-bridge-in-thoothukudi-sluggishness-in-repair-work




