சென்னை செங்கல்பட்டு அருகே அரசு பஸ் கவிழ்ந்த சம்பவத்தில் 25 பேர் காயம் அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் 25-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது, அந்த பஸ் செங்கல்பட்டு அருகே ஜி.எஸ்.டி. சாலையில் வந்தபோது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. போலீசார் விசாரணை இந்த சம்பவத்தில், பஸ்சில் இருந்த பயணிகளில் 25 பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று அவர்களை மீட்டு, சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், பஸ்சின் பிரேக் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. விபத்து நடந்தவுடன் பஸ்சில் இருந்த இருந்து ஓட்டுநர், நடத்துனர் தப்பியோடி விட்டனர். விபத்து தொடர்ச்சியாக, ஜி.எஸ்.டி. சாலையில் 2 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-near-chengalpattu-25-injured




