தொகுதி மறுவரையறை மசோதா குறித்துப் பேச அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது தவெக அரசு. ஆனால், இதில் திமுக எம்.பி-க்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்தும், இது காவிரிப் பிரச்னையைத் திசைதிருப்பத் த.வெ.க. அரசு நடத்தும் நாடகம்தான் எனக் குறிப்பிட்டு திமுக எம்.பி கனிமொழி பதிவிட்டிருக்கிறார். கனிமொழி கண்டனம் அந்தப் பதிவில் அவர், "தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் என்பதிலும் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப்போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு இன்னும் கையில் கிடைக்கப்பெறவும் இல்லை. இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். அதனை ஒருமனதாக நிறைவேற்றிய கட்சிகளுக்கும் அதே நிலைப்பாட்டில் உள்ளபோது, முதலமைச்சர் கூட்டும் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்தக் கட்சிகளை மாற்ற வேண்டும் என்றா? காவிரிப் பிரச்சினைக்காகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மேகதாது அணைக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், காவிரிப் பிரச்சினையைத் திசைதிருப்பத் த.வெ.க. அரசு நடத்தும் நாடகம்தான் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம்.: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் என்பதிலும் எங்கள் தலைவர் திரு.@mkstalin தலைமையிலான தி.மு.கழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு… — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 8, 2026 எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது. உழவர்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் M.P.க்களுடன் இணைந்து ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா?" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/governance/kanimozhi-dmk-boycotts-tvk-delimitation-meeting-statement




