செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரஷிய கடற்படை அதிகாரிகளுடனான கூட்டத்தில் பேசிய அதிபர் விளாடிமிர் புதின், ஈரானின் கொசுப்படையை பாராட்டி பேசினார். அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலை 5 மாதங்களாக திறம்பட ஈரான் எதிர்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹார்மூஸ் ஜலசந்தியை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டுள்ளது. இதனால், உலக அளவில் சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்து உள்ளது. கொசுப்படை கடந்த சில நாட்களாக ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதனால், பதற்றம் தணிந்துள்ளது. எனினும், ஜலசந்தியை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில், ஈரான், தன்னுடைய கடற்படையின் ஒரு பகுதியாக கொசுப்படையை பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடற்படை அதிகாரிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது மத்திய கிழக்கு பகுதியில் காணப்படும் சமீபத்திய நிகழ்வுகளை சுட்டி காட்டி பேசினார். ரஷிய அதிபர் புதின் இதுபற்றி ரஷியாவின் ஸ்புட்னிக் என்ற அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், ரஷிய அதிபர் புதின் பேசும்போது, மத்திய கிழக்கில் போர் களத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஈரான் தங்களுடைய கொசுப்படையை பயன்படுத்தி வருகிறது. அது போர் களத்தில் திறமையாக செயல்படுகிறது என்று பாராட்டினார். அவற்றில் ஈடுபடுத்தப்படும் படகுகள் சிறிய அளவில் இருந்தபோதும், நவீன ஆயுதங்களை கொண்டுள்ளதுடன், போரின்போது திறமையாக செயல்பட உதவுகிறது என்றார். அதனால், வருங்காலத்தில் ரஷிய கடற்படையும் இதுபோன்ற திறன் வாய்ந்த படை பிரிவை உருவாக்க வேண்டும் என்று அப்போது கேட்டு கொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/efficient-operation-putin-praises-irans-drone-force




