நடிகர் ஜீவா நடித்துள்ள ‘தகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு 40 நாள்களில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. ‘கிடா’ படத்தின் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் ஜீவா, ரஜிஷா விஜயன் இணைந்து நடித்துள்ள படம் ‘தகப்பன்’. மாமன், கருடன் ஆகிய வெற்றிப்படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா -மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து உருவாகும் ஆழமான குடும்பக் கதையாக ‘தகப்பன்’ படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு தொடங்கிய மதுரை மேலூர் பகுதியில் உள்ள மேலவளவு கருப்பு கோயிலிலேயே படத்தின் இறுதிக்கட்ட இரவு நேரப் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்துக்கு மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவு இந்நிலையில், நடிகர் ஜீவா நடித்துள்ள ‘தகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு 40 நாள்களில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் டிசம்பரில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த பொங்கலுக்கு ஜீவா நடிப்பில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ வெற்றிப்படமாக அமைந்தது. இதனால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய ஜீவாவுக்கு அடுத்தடுத்து படம் வரத் தொடங்கியுள்ளது. ராஜேஷ் எம் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/jeevas-thagappan-film-shooting-wrapped



