Full Article
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டின் மீது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சல்மான் கானுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக வேறு ஒரு வீட்டில் குடியேற சல்மான் கான் முடிவு செய்துள்ளார். புதிய வீடு குடும்பத்தினர் அனைவருக்கும் வசதியாக இருக்க வேண்டும் என்று கருதி அதற்கு தக்கபடி இடத்தைத் தேடி வந்தார். தற்போது வசிக்கும் கேலக்ஸி அபார்ட்மெண்ட்டிற்கு அருகில் 70 ஆண்டுகள் பழமையான இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இருக்கிறது. அந்தக் கட்டிடத்தை சல்மான் கான் குடும்பம் வாங்கி இருக்கிறது. அந்த இடத்தில் 6 மாடியில் புதிய வீடு கட்ட சல்மான் கான் முடிவு செய்துள்ளார். இது தொடர்பான திட்டத்திற்கு மகாராஷ்டிரா கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் கொடுத்து இருக்கிறது. மொத்தம் 1014 சதுர மீட்டர் அளவுக்கு இந்த வீடு கட்டப்பட இருக்கிறது. இந்த வீட்டைக் கட்டும் ஒப்பந்ததாரர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டார். இத்திட்டத்திற்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டே ஒப்புதல் கொடுத்துவிட்டது. நடிகர் சல்மான் கான் ஒப்புதல் கொடுக்கும்போது ஏற்கனவே இருக்கும் மரங்களை வெட்டக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த இடத்தைச் சுற்றி நாட்டு மரக்கன்றுகளை நடவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. சல்மான் கான் தற்போது இருக்கும் வீட்டில் இருந்து சற்றி தள்ளி புதிய வீடு கட்டப்பட இருக்கிறது. புதிய வீடு கட்டிய பிறகு குடும்பத்தோடு அந்த வீட்டில் சல்மான் கான் குடியேற இருக்கிறார். அதேசமயம் கேலக்ஸி அபார்ட்மெண்ட்ஸ் பல தசாப்தங்களாக சல்மான் கானுடன் நெருக்கமாகத் தொடர்புடையது. சல்மான் கான் குறிப்பாக திருவிழாக்கள் மற்றும் அவரது பிறந்தநாளில் வீட்டின் பால்கனியில் இருந்து ரசிகர்களின் வாழ்த்துக்களைப் பெறுவது வழக்கம். மும்பையின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட பிரபல முகவரிகளில் ஒன்றாக கேலக்ஸி அபார்ட்மெண்ட் இருக்கிறது. Aamir Khan: ஷாருக்கான், சல்மான் கான் முன்னிலையில் திருமணம்; கௌரியை மணமுடிக்கும் ஆமீர் கான்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below



