புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்தவருமான கபில் தேவுடன், தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே. சுதீஷ் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக எல்.கே. சுதீஷ் வெளியிட்டுள்ள பதிவில், என் வாழ்க்கையின் முதல் ஹீரோவான, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் அவர்களை அவரது இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.என்றென்றும் அவரது தீவிர ரசிகனாகவே இருப்பேன். வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்துப் போற்றக்கூடிய அழகான நினைவாக இந்த சந்திப்பு இருக்கும். என தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/dmdk-mp-sudheesh-meets-kapil-dev




