பிராங்பர்ட், ஜெர்மனி கால்பந்து அணி 2014-ம் ஆண்டு உலகக் கோப்பையை 4-வது முறையாக கைப்பற்றிய பிறகு தொடர்ந்து தடுமாறுகிறது. 2018 மற்றும் 2022-ம் ஆண்டு உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் நடையை கட்டிய ஜெர்மனி இந்த முறை 2-வது சுற்றில் பராகுவேயிடம் பெனால்டி ஷூட்-அவுட்டில் பணிந்தது. மோசமான தோல்வி எதிரொலியாக பயிற்சியாளர் ஜூலியன் நாகல்ஸ்மேன் விலகினார். இந்த நிலையில் ஜெர்மனி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜர்கென் குளோப் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். 2030-ம் ஆண்டு உலகக் கோப்பை வரை அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். நேற்று நிருபர்களிடம் பேசிய அவர், 'இந்த வேலையை விரும்புகிறேன். ஆனால் தேவைப்பட்டால் அதில் இருந்து விலகவும் எப்போதும் தயாராக இருக்கிறேன். நீங்கள் (ஊடகத்தினர்) எனது குடும்பத்தினருக்கு தொல்லை கொடுத்து அவர்களை நிம்மதியாக இருக்க விடாமல் செய்தால் நான் விலகி விடுவேன்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/football/klopp-appointed-as-germany-team-coach




