இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கிறது 'மண்டாடி'. படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. Mandadi படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், 'மண்டாடி'யில் சிங்காரமாக நடித்திருக்கும் நடிகர் ரவீந்திர விஜய்யைப் பேட்டி கண்டோம். 'ஃபேமிலி மேன்', 'ரகு தாத்தா' படைப்புகள் மூலம் மக்களுக்குப் பெரியளவில் பரிச்சயமானவர் இவர். நம்மிடையே பேசுகையில், "'மண்டாடி' நாங்க நினைச்சதை விட ரொம்ப பெரிய படமா வெளிய வந்திருக்கு. கதை, வசூல்னு மக்கள் இந்த படத்தைக் கொண்டாடுறாங்க. உண்மையிலேயே எனக்கு தியேட்டர் போய் என்னோட நடிப்பைப் பார்க்குறதுக்குப் பெரியளவுல விருப்பமிருக்காது. அது ஏன்னு தெரியல. தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகான்னு எல்லா இடங்கள்லயும் 'மண்டாடி' நல்ல வரவேற்பைப் பெற்று வருவது மகிழ்ச்சி. Ravindra Vijay - Mandaadi இப்போ இன்ஸ்டாகிராம், ட்விட்டர்ல நிறைய மெசேஜ்கள் வருது. முக்கியமா, 'படத்துல வர்ற உறவின் பக்கங்களை ரொம்ப கவனமா கையாண்டிருந்தீங்க'னு சொல்றாங்க. சிங்காரம், காளி, ஏஞ்சல்னு மூணு பேருக்குமான எமோஷனல் டிராமா காட்சியில நல்லா நடிச்சிருந்ததாக நிறைய பேர் பாராட்டுறாங்க. அதை நான் பர்சனலா ரொம்ப முக்கியமான பாராட்டாகப் பார்க்குறேன். இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எனக்கு முதல்ல கதையின் லைன்தான் சொன்னாரு. அப்புறம் ஸ்கிரிப்ட் படிக்கக் கொடுத்தாரு. நான் அதைப் படிச்சுட்டு, 'எனக்கு சாட்டாப்புலி கேரக்டர் பண்ண விருப்பமா இருக்கு'னு கேட்டேன். ஆனா அவர் சிங்காரம் கேரக்டருக்கு நான் பண்ணா நல்லா இருக்கும்னு யோசிச்சிருக்கார். சரி, நம்ம மேல ஒருவர் இவ்வளவு நம்பிக்கை வைக்கும்போது முயற்சி பண்ணலாம்னு இறங்கினேன். இந்தப் படத்துக்காக நாங்க இராமநாதபுரத்தைச் சேர்ந்தவராக முழுமையாக மாறிட்டோம். லுக் டெஸ்ட்லேயே பாதி விஷயம் வந்துடுச்சு. கைலி கட்டுற விதம், அங்க இருக்குற மக்களோட டிரெஸ்ஸிங் ஸ்டைல், பாக்கெட்ல தெரியுற மாதிரி பெரிய போன் வச்சிருக்கிறதுனு நிறைய விஷயங்கள் எங்களுக்குச் சொல்லப்பட்டுச்சு. மேலும், படத்தின் வசனக்கர்த்தாக்கள் அமீர் மற்றும் வசந்த் ரெண்டு பேரும் இராமநாதபுரத்தைச் சேர்ந்தவங்கதான். அவங்க பேசுற வட்டார வழக்கைக் கவனிச்சு, புது புது வார்த்தைகளைக் கத்துக்கிட்டு படப்பிடிப்பு தளத்துல பேசினோம். அப்புறம் தொண்டில பல நாட்கள் தங்கி அங்க இருக்குற மக்களோட பழகினோம். Ravindra Vijay - Mandaadi படப்பிடிப்பு ரொம்பவே சவால்தான். கடல்ல வேலை செய்றப்போ வெயில், உப்பு காத்து பட்டு முடி செம்பட்டையா மாறிடுச்சு. பிறகு போக போக அந்த ஊரோட நாங்களும் ஒன்றி போயிட்டோம். அங்க பெரிய லாட்ஜ் வசதிகள் கிடையாது. அங்குள்ள வீடுகள்ல வாடகை செலுத்தி எங்களைத் தங்க வச்சிருந்தாங்க. தினமும் கடலுக்குள்ள போய் ஷூட் பண்றது உடலளவில் ரொம்ப கஷ்டமான விஷயம்" என்றவர், படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்துகள் குறித்து, "கடலுக்குள்ள போய் படகுல கயிற்றையும் பாயையும் பிடிக்கும்போது கை எல்லாம் அறுத்துட்டு போயிடும். நாம கடையில மீன் வாங்கி சாப்பிடுறதுக்குப் பின்னாடி எவ்வளவு கடினமான உழைப்பு இருக்குனு அங்க போன பிறகுதான் புரிஞ்சது. ஷூட்டிங்ல தினமும் 50 படகுகள் நிஜக் காத்துலதான் போகும். காத்து திடீர்னு திசை மாறினா படகு கவிழ்ந்துடும். உயிரைப் பணயம் வச்சுதான் அந்த ஸ்டன்ட் காட்சிகளை எடுத்தாங்க" எனப் பகிர்ந்துகொண்டார். Mandaadi: " 'உன்னை கொன்றுக்கணும், விட்டிருக்கக் கூடாது'னு கமென்ட்ஸ் போடுறாங்க!" - 'மண்டாடி' கிட்டான் தொடர்ந்து பேசியவர், "சூரி சார் ஸ்பாட்ல ரொம்ப துடிப்பா இருப்பாரு. அதே சமயம், கட் சொன்னதும் எல்லாரையும் சிரிக்க வைக்கிற மாதிரி ஜாலியாகப் பேசிட்டிருப்பாரு. ஆனா ஆக்ஷன்ங்கிற வார்த்தை இயக்குநர்கிட்ட இருந்து வந்துட்டா போதும், சின்ன சின்ன விஷயங்கள்லகூட அவ்வளவு கவனமாகப் பண்ணுவாரு. ஒரு காமெடியனா இருந்து கதாநாயகனாக வளர்ந்து பல ஸ்டீரியோடைப்புகளை அவர் உடைச்சிருக்காரு. டோலிவுட்ல சுஹாஸும் அதே மாதிரிதான். தெலுங்குல இருந்து வந்துட்டு, ராமநாதபுரம் தமிழைப் பேசுறதுக்கு ரொம்ப மெனக்கெட்டாரு. Ravindra Vijay - Mandaadi நைட் எல்லாம் பேப்பரை வச்சு மனப்பாடம் பண்ணி, பதற்றத்தோட வந்து கேமரா முன்னாடி வந்து நடிப்பாரு. அதை அற்புதமாக நடிச்சு முடிக்கிறதுதான் அவருடைய தனித்துவமான விஷயம். ரொம்ப கடின உழைப்பைக் கொட்டும் நடிகரவர்" எனப் பகிர்ந்த ரவீந்திரா விஜய், "முன்னாடி எனக்கு நிறைய போலீஸ் கதாபாத்திரங்கள்தான் வந்துச்சு. அந்த ஸ்டீரியோடைப்பை உடைக்கிறதுக்கு நிறைய விஷயங்கள் பண்ணினேன். குறிப்பா சில கதாபாத்திரங்கள்ல நடிக்க மறுத்தேன். அந்தக் கதாபாத்திரங்கள் பெரியளவுல வரவேற்கப்பட்டிருந்தாலும் எனக்கு வருத்தம் இல்லை. ஏன்னா, அதுல நான் நடிச்சு, பெரியளவுல பேசப்பட்டாலும், மீண்டும் மீண்டும் எனக்கு போலீஸ் கேரக்டர்தான் வந்திருக்கும்." என்றவரிடம், "நீங்கள் பார்ப்பதற்கு எம்.ஆர். ராதாவைப் போலவே இருக்கிறீர்கள் என்கிற கமெண்டுகளைப் பார்க்க முடிகிறதே." எனக் கேட்டோம். பதில் தந்தவர், "(சிரித்துக் கொண்டே.) ஆமாங்க, எனக்கும் அவருடைய பயோபிக்ல நடிக்கணும்னு ஆசை இருக்கு. பார்ப்போம்!" எனப் பேசி முடித்தார். வீடியோ பேட்டி லிங்க் கீழே முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/kollywood/mandadi-actor-ravindra-vijay-interview-soori-suhas



