மதுரை மதுரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். மதுரையில் மேலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் கார்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயுள்ளன. விபத்தில் சிக்கி 3 வயது பெண் குழந்தை உள்பட 5 பேர் பலியானார்கள். 2 பேர் காயம் அவர்கள் தவிர 2 பேர் காயமடைந்து உள்ளனர். தகவல் அறிந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவில்லை. அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-two-cars-head-on-collision-5-killed




