செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் கிராமம் அருணாச்சலம் நகர் பகுதி சேர்ந்தவர் அன்புமணி. இவரது மனைவி பத்மாவதி (வயது 70). இவர்களின் மகள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பனையூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் பத்மாவதி கடந்த 13-ந் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே திமிரியில் நடந்த உறவினர் திருமணத்திற்கு வந்தார். திருமணம் முடிந்தவுடன் தான் அணிந்திருந்த 11 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்து கொண்டு, பஸ்சில் ஆரணிக்கு வந்துவிட்டு மீண்டும் மகளை பார்ப்பதற்காக பனையூர் கிராமத்திற்கு சென்றார். முன்னதாக திமிரியில் இருந்து ஆரணிக்கு வர பஸ்சில் ஏறும்போது கூட் டம் அதிகமாக இருந்தது. சிறிதுதூரம் வந்தவுடன் அவர் தனது பையை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 11 பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. அலைக்கழிப்பு இதுகுறித்து பத்மாவதி திமிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஓடும் பஸ்சில் திருட்டு நடந்ததால் தனது எல்லை பகுதிக்குள் வரவில்லை என்று திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் ஆரணி தாலுகா போலீசார் திருட்டு நடந்த இடம் திமிரி பகுதி என்றும் கூறி யார் வழக்குப்பதிவு செய்வது என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் நகை திருடியது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/11-sovereigns-of-jewelry-stolen-from-an-elderly-woman-on-a-moving-bus




