பெங்களூரு, தமிழகத்துக்கு செப்டம்பர் 9ம் தேதியிலிருந்து 15 நாட்களுக்குத் தினமும் வினாடிக்கு 6000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை காவிரி மேலாண்மை ஆணையமும் உறுதி செய்தது. இதனால் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டிய கட்டாயம் கர்நாடக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு வருகிற14ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவதாக கர்நாடக நீர்வளத்துறை மந்திரி செலுவராய சாமி தெரிவித்துள்ளார். மேலும், மேகதாது அணை திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/karnatakas-supreme-court-petition-against-releasing-water-to-tamil-nadu-hearing-on-the-14th



