ஐதராபாத், சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக கூறப்படும் வழக்கில் விசாரணைக்காக, நடிகை நிதி அகர்வால் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். 21 பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக கூறி இதுவரை 21 பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி, பிரணீதா, நிதி அகர்வால், அனன்யா நாகேல்லா, ஸ்ரீ ஹனுமந்து, ஸ்ரீமுகி, வர்ஷினி சௌந்தரராஜன் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் காவல்துறை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தொழிலதிபர் அளித்த புகார் கடந்த ஆண்டு, தெலுங்கானா மாநிலம் மியாபூர் காவல் நிலையத்தில் 32 வயதான தொழிலதிபர் பி.எம். பணிந்திர சர்மா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தொடர்பான எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இளைஞர்கள் பணத்தை இழப்பதாக புகார் சமூக வலைதள பிரபலங்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள், 1867-ம் ஆண்டின் பொது சூதாட்ட சட்டத்தை (Public Gambling Act, 1867) மீறி சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற விளம்பரங்களால் ஈர்க்கப்படும் இளைஞர்கள், சூதாட்ட செயலிகளில் பணத்தை இழப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. நிதி அகர்வாலிடம் விசாரணை இந்நிலையில், சூதாட்ட செயலி விளம்பர வழக்கு தொடர்பாக நடிகை நிதி அகர்வால் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/nidhhi-agerwal-appears-before-enforcement-directorate-in-alleged-illegal-betting-app-case




