பெரும்பாவூர், ‘நடிகர் மோகன்லால், விஜய்யை விட சிறப்பாக நடனம் ஆடுகிறேன்’ வைரலான ஏ.ஐ. வீடியோவுக்கு கேரளம் முதல்-மந்திரி நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். கேரள முதல்-மந்திரி வி.டி.சதீசன், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர்-2' படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து நடனமாடுவது போன்ற ஏ.ஐ.(செயற்கை நுண்ணறிவு) வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, கேரளத்தில் மின் நுகர்வு அதிகரித்து உள்ளதால், இரவு நேரங்களில் மின் வினியோக கட்டுப்பாடு அமலில் இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த வீடியோ உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த வைரல் வீடியோ குறித்து கொச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முதல்-மந்திரி வி.டி.சதீசன் பேசியதாவது:- இந்த தொழில்நுட்பம் தற்போது இசை, நடனம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் ஒரு சுவாரஸ்யமான வீடியோவை பார்த்தேன். அதில் நான் ஒரு குழு நடனத்திற்கு தலைமை தாங்குவது போல் சித்தரிக்கப்பட்டு உள்ளது. நடிகர் மோகன்லால் மற்றும் எனது நண்பரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜய்யை விடவும் சிறப்பாக நடனமாடுகிறேன். இதை கண்டு அதிர்ச்சி கலந்த வியப்படைந்தேன் என நகைச்சுவையாக கூறினார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதனை 10 மில்லியன் மக்கள் பார்த்து உள்ளனர். மேலும் இந்த தொழில்நுட்பம் மிக ஆபத்தானது. எனவே இவற்றை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/i-dance-better-than-actor-mohanlal-and-vijay-says-chief-minister-vt-satheesan




