சென்னை, சாகித்திய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பூமணி காலமானார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் அவர் காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிச் சடங்குகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடக்கின்றன. கோவில்பட்டி பாரதிநகர் மேட்டுத் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் இன்று மாலை 4 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் பிறந்த எழுத்தாளர் பூமணியின் இயற்பெயர் பூலித்துரை மாணிக்கவாசகம். பூமணி, தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான ஆளுமை. அவரது 'அஞ்ஞாடி' நாவலுக்காக 2014-ம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான 'அசுரன்' திரைப்படத்தின் கதாசிரியர் பூமணி ஆவார். அவரது வெக்கை நாவலை தழுவியே அசுரன் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/asuran-writer-poomani-passes-away




