சென்னை, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, 'ஓம்' திரைப்படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. இப்படம் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமியுடன் கூட்டணி அமைத்த தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது ‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆடேக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு ‘ஓம்’ டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் ‘ஓம்’ ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில், ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி கதாநாயகிகளாக நடிக்கின்றன. மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாவும் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் ரிலீஸ் அறிவிப்பு சமீபத்தில் வெளியான ‘ஓம்’ படத்தின் டைட்டில் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தனுஷின் பிறந்தநாளையொட்டி வெளியான ‘அலாக்கா லோவா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில், ‘ஓம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வருகின்றன. ராஜ்குமார் பெரியசாமி கொடுத்த அப்டேட் இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ‘ஓம்’ திரைப்படத்தின் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது, " ஓம் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பே, கதாபாத்திரங்களுக்கு யார் நடிக்க வேண்டும் என்பது குறித்து எனக்கென ஒரு விருப்பப் பட்டியல் இருந்தது. கார்த்திகேயன் கதாபாத்திரத்திற்கு முதல் தேர்வாக மம்மூட்டி சாரைத்தான் நினைத்திருந்தேன். அதேபோல் தனுஷ், இந்திரன்ஸ், நசீருதீன் ஷா, சாய் பல்லவி, ஸ்ரீலீலா என அனைத்து நடிகர்களையும் மனதில் வைத்தே கதையை உருவாக்கினேன். அவர்களிடம் கதையின் மையக்கருத்தை எடுத்துச் சென்றபோது, அனைவரும் உடனடியாக நடிக்க சம்மதித்தனர். படம் தற்போது எந்த அளவுக்கு உருவாகியுள்ளது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 'ஓம்' திரைப்படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. இப்படம் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/om-in-the-final-stages-of-production-director-rajkumar-periasamy-shares-an-update




