சீனா, சீனாவில் விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் ஒன்று ஏவப்பட்ட 85 வினாடிகளிலேயே வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயற்கைக்கோளை சுமந்து சென்ற ராக்கெட் ராணுவம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சோங்ஜிங்-4பி என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியது. இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்காக, ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘லாங் மார்ச் 7A’ ராக்கெட் ஏவப்பட்டது. 85 வினாடிகளில் நடந்த விபரீதம் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 85 வினாடிகளில் திடீரென வெடித்துச் சிதறியது. இந்த வெடிப்பில் ராக்கெட்டும், அதனுள் கொண்டு செல்லப்பட்ட சோங்ஜிங்-4பி தகவல் தொடர்பு செயற்கைக்கோளும் முற்றிலுமாக அழிந்தன. ராக்கெட்டின் உந்துவிசை பகுதி வழக்கமாக பிரிய வேண்டிய கட்டத்தை அடைவதற்கு முன்பே இந்த வெடிப்பு நிகழ்ந்ததது. இதன் காரணமாக, செயற்கைக்கோளை நிலைநிறுத்தும் திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள ‘லாங் மார்ச் 7A’ ராக்கெட்டுக்கு, இது 2-வது தோல்வியாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/chinese-rocket-exploded-85-seconds-after-launch




