சென்னை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 99-வது பிறந்தநாளையொட்டி தவெக தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தனது நிகரற்ற நடிப்பாற்றலாலும், கம்பீரக் குரலாலும், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி, திரையுலகின் இமயமாய் திகழ்ந்து, உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்தநாளில் அவரது மகத்தான கலைப்பணியை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன். வரலாற்று நாயகர்கள், புராண மாந்தர்கள், சமூகத்தின் எளிய மனிதர்கள் என அனைத்து கதாபாத்திரங்களையும் தன் அசாத்திய நடிப்பால் நம் கண்முன்னே நிறுத்தி, தமிழின் செழுமையையும் பெருமையையும் திரைப்படங்களின் வழியே உலகறியச் செய்து நடிப்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர். அன்பு, பாசம், வீரம், கோபம், சோகம் போன்ற மானுட உணர்வுகளின் பரிமாணங்களைத் தனது நடிப்பால் வெளிப்படுத்திய நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் கலையுலகச் சாதனைகள் தலைமுறைகளைக் கடந்தும் தமிழ் மண்ணின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/sivaji-ganesan-was-the-embodiment-of-acting-excellence-chief-minister-vijay-pays-tribute




