துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் சென்ற விமானத்தில் விமானியைச் சக விமானி கத்தியால் குத்தினார். இந்தத் தாக்குதல் விமானத்தைத் தகர்க்க முயற்சித்ததில் நடந்தது என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் தாக்கப்பட்ட விமானி இந்தியாவைச் சேர்ந்த ஸ்மித் மச்சார். தாக்கிய விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்று இஸ்ரேல் தரப்பு கூறிவருகிறது. நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசியிருந்தார். ஃபிளைதுபாய் விமானம்கத்திக்குத்துடன் 174 பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மிச்சார் யார்? | Incident Timeline அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், குற்றம் சாட்டப்படும் விமானி தீவிரவாதி என்பதுபோல தெரிகிறது என்று கூறியிருந்தார். நேற்று, ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தந்த பேட்டியில் ட்ரம்ப், “ஈரானுக்கும், இந்தச் சம்பவத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்பதைப் பார்த்து வருகிறோம். ஆனால், இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஒருவேளை, தொடர்பிருந்தால் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும்” என்று பேசியிருக்கிறார். முன்பு இதே கேள்வி நெதன்யாகுவிடமும் கேட்கப்பட்டது. “ஈரானுக்கும், இந்தச் சம்பவத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்பதை இப்போதே சொல்லிவிட முடியாது. விமானிக்கும் ஈரானுக்கும், வேறு யாருக்காவதும் தொடர்பிருக்கிறதா என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று பதில் சொல்லியிருக்கிறார் நெதன்யாகு. Fly Dubai: 'பிளம்பர், பல் மருத்துவர்' ஸ்மித் மிச்சாருடன் இவர்களும் உண்மையான வீரர்களே! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/indian-pilot-attacked-on-dubai-tel-aviv-flight-iran-link-probed




