சென்னை, என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில் தற்போது பொதுப் பிரிவினருக்கும், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவினருக்கும் கலந்தாய்வு நடக்கிறது. முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 3-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. அதில் பொதுப்பிரிவு மற்றும் 7.5 சதவீத ஒதுக்கீடு என மொத்தம் 26 ஆயிரத்து 851 இடங்கள் நிரம்பின. 2-வது சுற்று கலந்தாய்வு நிறைவு 2-வது சுற்று கலந்தாய்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் இரு பிரிவிலும் சேர்த்து மொத்தம் 59 ஆயிரத்து 951 இடங்கள் நிரம்பின. அதாவது முதல் மற்றும் 2-வது சுற்று கலந்தாய்வு நிறைவில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 77 இடங்களில் 86 ஆயிரத்து 802 இடங்கள் நிரம்பியுள்ளன. எஞ்சியுள்ள ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 275 இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 761 பேர் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டனர். 3ஆம் சுற்று கலந்தாய்வில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை நாளை வரை பதிவு செய்யலாம். தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட 5% சரிந்துள்ளது. கடந்த ஆண்டில் 2ஆம் சுற்று முடிவில் 46.34% இடங்கள் நிரம்பியிருந்த நிலையில், இந்த ஆண்டு 41.15% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/education-and-employment/engineering-counseling-86802-seats-filled-in-2-rounds




