அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியிருக்கும் 'அன்பில் அவன்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. 'போர் தொழில்' படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜாதான் இப்படத்தின் கதாசிரியர். விக்னேஷ் ராஜா, இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திகேயன், அசோக் செல்வன் ஆகிய மூவரும் இணைந்துதான் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். ‘அன்பில் அவன்’ அத்தோடு, ஹேப்பி ஹை பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை அசோக் செல்வனும், அவருடைய சகோதரி அபிராமியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு, 'தர்மன்' திரைப்படம் தொடர்பாகப் பகிர்ந்திருக்கிறார். அவர் பேசுகையில், "என்னுடைய தொடக்கம் இங்குதான் அமைந்தது. என்னுடைய முதல் படத்தைத் தயாரித்ததும் 'ஹேப்பி ஹை பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனம்தான். அதனால் கண்டிப்பாக நான் இந்த நிகழ்வுக்கு வந்தாக வேண்டும் என விரும்பினேன். 'அன்பில் அவன்' கதையை நான் படித்திருக்கிறேன். இது நிச்சயமாக எல்லோருக்கும் பிடிக்கும். இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதிய கதை, கார்த்திகேயனின் இயக்கம், அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பு, 'ஹேப்பி ஹை பிக்சர்ஸ்' தயாரிப்பு ஆகியவற்றால் இந்தப் படம் சிறப்பாக உருவாகியுள்ளது" என்றவர், 'தர்மன்' திரைப்படம் குறித்து, "மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது, படப்பிடிப்பு சரியாகத் திட்டமிட்டபடி சென்று கொண்டிருக்கிறது. Ashwath Marimuthu படத்தின் வேகம் மற்றும் குவாலிட்டி குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் ரஜினி. நான், அசோக் செல்வன் உட்பட அனைவரும் அவருடைய மிகப்பெரிய ரசிகர்கள். நான் என்னுடைய இரண்டு படங்களிலும் என்னுடைய நண்பர்களுடன்தான் பணியாற்றியிருக்கிறேன். இந்தப் படம் தொடங்கும்போது அதனை யோசித்து பயந்தேன். அவருடைய பணியாற்றும் விதம் அற்புதமாக இருக்கிறது. 50 வருடத்திற்குப் பிறகும் ஒரு குழந்தையைப் போல அந்த எக்சைட்மென்டோடு பணியாற்றி வருகிறார்." எனக் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/kollywood/anbil-avan-pre-release-event-ashok-selvan-rajinikanth-dharman-updates




