திருச்சி, திருச்சியில் ஆட்டோ மெக்கானிக் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தம்பியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆட்டோ மெக்கானிக் திருச்சி தென்னூர் வெள்ளாள தெருவில் வசித்து வருபவர் அப்துல் சமதுவின் மனைவி நிஷா. இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவருடைய 2-வது மகன் பாரூக் (வயது 32). ஆட்டோ மெக்கானிக். இவருடைய தம்பி அசாருதீன் (28), மீன் கடையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மது குடிக்கும் பழக்கம் கொண்ட இருவரும், அடிக்கடி போதையில் வீட்டில் தகராறு செய்துகொள்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று நிஷா வழக்கம் போல் வீட்டு வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார். கழுத்து அறுத்துக்கொலை அப்போது வீட்டின் உள்ளே பாரூக் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மேலும் வீட்டினுள் பொருட்கள் சிதறிக்கிடந்தன. டி.வி. உடைக்கப்பட்டு கிடந்தது. அதைப்பார்த்து அவர் கதறி அழுதார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி தில்லைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தடயங்கள் துணை போலீஸ் கமிஷனர் அரவிந்த், உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் பாரூக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தம்பியை பிடித்து விசாரணை இதுகுறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் பாரூக், அசாருதீன் ஆகிய இருவரும் நேற்று மாலை மது அருந்திவிட்டு வீட்டில் இருந்ததும், இருவரும் போதையில் தகராறு செய்ததும், பின்னர் அசாருதீன் வீட்டில் இருந்து வெளியே சென்றதும் தெரியவந்தது. இதனால், அந்த தகராறில் வீட்டில் இருந்த கத்தியால் அண்ணனின் கழுத்தை அறுத்து அசாருதீன் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதைத்தொடர்ந்து அசாருதீனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-mechanic-murdered-drunken-younger-brother-commits-brutal-act-against-older-brother




