விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் என்று போலீசார் முன் இளைஞர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து மத பண்டிகையான விநாயகர் சதுர்த்தியின்போது கடந்த 16ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் வழியாக விநாயகர் ஊர்வலம் சென்றுள்ளது. அப்போது, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் இது தொடர்பாக இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் போலீசார் விசாரணைக்கு சென்றனர். அப்போது, அங்கு இருந்த இளைஞர், பாரத மாதவுக்கு ஜெய் என்று கூச்சலிடுவார்கள். நாங்கள் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டுமா? என்று கூறினார். அப்போது மற்றொரு இளைஞர் வேகமாக ஓடி வந்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். என்று போலீசார் முன் கோஷம் எழுப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த இரு இளைஞர்களையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் என்று போலீசார் முன் இளைஞர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/bomb-will-explode-in-srivilliputhur-youth-threatens-police




