பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சிக்கா டுகொடி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் வசித்து வரும் தம்பதிக்கு 1.5 வயதில் குழந்தை உள்ளது. 3வது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை இந்நிலையில், நேற்று மதியம் அந்த வீட்டில் தம்பதி இருந்தபோது அவர்களின் 1.5 வயது குழந்தை வீட்டின் பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக குழந்தை திடீரென 3வது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியில் இருந்து கீழே சாலையில் விழுந்தது. சாலையில் குழந்தை விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடிச்சென்று குழந்தையை மீட்டனர். படுகாயம் கை, தலை உள்பட பல இடங்களில் படுகாயமடைந்த குழந்தையை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை மாடியில் இருந்து கீழே விழும் சம்பவம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 1. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/baby-falls-from-third-floor-bengaluru




